சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி தெரிவித்துள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என நீதிமன்றம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர்.
ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார்.ஜெயலலிதா இறந்துவிட்டதற்கான சான்றிதழை சசிகலா தரப்பு ஏன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.