Vidya Balan thanks sanitation worker

  1. home
  2. > bollywood
  3. > Vidya Balan thanks sanitation worker
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி!

May 13, 2019 18:09 IST

டிஜிட்டல் டைரி! - சைபர் சிம்மன் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசித்தோமா, நம் பங்குக்குப் பகிர்ந்துகொண்டோமா, வேறு வேலை பார்த்தோமா என்று இருந்துவிடுவது சரியாக இருக்காது. பகிரப்படும் படங்கள் சொல்லும் சேதி என்ன எனக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பது நலம். உதாரணத்துக்கு அண்மையில் வைரலான இன்ஸ்டகிராமை ரசிக்கும் சிம்பன்சி வீடியோவையே எடுத்துக்கொள்ளலாம். மைக் ஹால்டன் என்பவர் பகிர்ந்துகொண்ட இந்த வீடியோவில் சிம்பன்சி ஒன்று கையில், டேப்லெட் போன்ற ஒரு கேட்ஜெட்டை வைத்துக்கொண்டு, இன்ஸ்டகிராம் பக்கத்தில் படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது. அந்த சிம்பம்சி மனிதர்கள் போலவே இன்ஸ்டகிராமில் படங்களைப் பார்த்ததோடு, சிலவற்றை லைக்கும் செய்தது. சின்பன்சி இன்ஸ்டகிராமைப் பார்த்து ரசிப்பது என்பது நம்ப முடியாத ஆச்சரியம்தானே! எனவேதான் இந்த வீடியோ பல்லாயிரக்கணானோரால் பகிரப்பட்டு வைரலாகப் பரவியது. வைரலான சிம்பன்சி வீடியோ என்பது ஊடகங்களுக்கும் சரியான சங்கதி என்பதால், இது தொடர்பான செய்தி பல ஊடகங்களில் வெளியாகி மேலும் வைரலானது. ஜேன் கோடாலின் கோபம்! இந்த வைரல் வீடியோ ஜேன் கோடாலைப் (Jane Goodall) பதற வைத்திருக்கிறது. கோடால், சிம்பென்சிகள் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் விலங்கு நல ஆர்வலர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் காடுகளில் சிம்பன்சிகளுடன் உலாவுவதில் செலவிட்டிருக்கிறார். சிம்பன்சிகளை அவரைவிட நன்கறிந்தவர் இருக்க முடியாது. அதனால்தான் வைரலாகப் பரவியிருக்கும் இந்த வீடியோ காட்சி சிம்பன்சிகளைப் பொறுத்தவரை வில்லங்கமாக மாற வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்திருக்கிறார். “சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் குட்டி சிம்பன்சியின் வீடியோ என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என குறிப்பிட்டுள்ள கோடால் அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார். “சிம்பன்சிகள் அதிக சமூகத்தன்மை கொண்ட, மிகவும் புத்திசாலித்தனமானவை. மனிதர்கள்போலவே சிக்கலான உணர்வுகள் கொண்டவை. அவற்றை நாம் சரியாகச் சித்திரிப்பதும், அவை பிடிபட்ட சூழலில் சிறந்த பராமரிப்பைப் பெறுவதும் முக்கியம்” என்கிறார் கோடால். இந்த வீடியோவில் அவருக்கு என்ன பிரச்சினை என்றால், மிகவும் புத்திசாலித்தனமான, அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கும் சிம்பன்சிகளைச் செல்லப் பிராணிகள் போல இது சித்திரிப்பதாகவும், இந்தப் போக்கு சிம்பன்சிகளுக்கு ஆபத்தானது என்பதும்தான். சிம்பன்சிகள் கடத்தலுக்கு வழிவகுப்பதோடு, மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கோடால் கவலை தெரிவித்திருக்கிறார். சிம்பன்சி வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கும் மைக் ஹால்டன் விலங்கு நல ஆர்வலர் எனத் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டாலும் சர்ச்சைக்குரிய நபராகவே கருதப்படுகிறார். இன்ஸ்டகிராமில் லைக்களை அள்ளுவதற்காக அவர் இப்படி சிம்பன்சியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அது கவலைக்குரிய போக்குதானே. எனவே, சிம்பன்சி இன்ஸ்டகிராமை பார்த்து ரசிக்கிறது என வியந்துபோவதோடு நின்றுவிடாமல், இந்த வீடியோவுக்கான தேவை என்ன என்றும் கொஞ்சம் யோசிப்போமே!.

Bollywood