1. home
  2. > Minnambalam
  3. > Sasikala Cried In Prison
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

Sasikala Cried In Prison

Jan 01, 2020 19:18 IST

சிறையில் கண்ணீர்விட்ட சசிகலா சிறையில் கண்ணீர்விட்ட சசிகலா தன்னை சந்திக்க வந்த அர்ச்சகரிடம் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு, சிறையில் இது மூன்றாவது புத்தாண்டு. இதற்கிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட கரன்சித் தாள்களைப் பயன்படுத்தி சசிகலா 1,674 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கியிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. அதுபோலவே கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் தான்தான் என சசிகலா பதிலளித்துள்ளதாகவும், பணமதிப்பழிப்பு தாள்களை பயன்படுத்தி வாங்கப்பட்டது குறித்து விவேக்கிற்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. விரைவில் சசிகலா விடுதலையாகவுள்ளதாக அமமுகவினர் கூறிவரும் நிலையில், இந்த விவகாரம் சசிகலாவுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் பெருமாள் கோயில் அர்ச்சகரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவுக்காரருமான ஒருவர் சிறையில் சசிகலாவை கடந்த வாரம் சந்தித்துள்ளார். இவர் ஜெயலலிதா இருந்தபோது அடிக்கடி போயஸ் கார்டன் சென்றுவருபவர் என்றும் கூறப்படுகிறது. சிறையில் அவரைப் பார்த்தது சசிகலா வாயில் கைவைத்தபடி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். அவரைத் தேற்றிய அர்ச்சகர், தான் எடுத்துவந்த பிரசாதத்தை அளித்துவிட்டு, “அம்மாவின் ஆத்மாவும், பெருமாளும் உங்களை கைவிடமாட்டார்கள். தைரியமாக இருங்கள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள். அம்மா போலவே விரைவில் ஆட்சி அதிகாரத்தில் அமர்வீர்கள். மார்ச் மாதத்திலிருந்து உங்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது. நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்” என்று கூறியுள்ளார். அதன்பிறகு அர்ச்சகரிடம் சிலவற்றை மனம்விட்டுப் பேசியுள்ளார் சசிகலா. “உங்களுக்குத் தெரியாதா, கடைசி வரை அக்காவுடன்தான் இருந்தேன். அவருக்காகத்தான் கஷ்டப்பட்டேன். கடைசியாக என்னைத் விட்டுட்டுபோயிட்டாங்க. அவங்களுக்காகத்தான் எதுவும் பேசாம இருந்துட்டு வர்றேன். நான் இங்க வந்ததுக்கு அப்புறம் அக்கா வாழ்ந்த வீட்டையே பாழடைய வச்சிட்டாங்க. கொடநாட்டு உள்ள புகுந்து துவம்சம் செஞ்சி கொள்ளையடிச்சிட்டு போனாங்க. அக்கா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப என்ன நடந்ததுன்னு அவங்களுக்குத் தெரியாதா? நன்றி கெட்டவங்க. என் மேல அபாண்டமா கொலைப்பழிய சுமத்திட்டாங்க” என்று கோபம் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார். அதற்கு அர்ச்சகர், “விரைவில் ஆட்சி கலைந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். உனக்கு துரோகம் செய்தவர்கள் உன்னைத் தேடி வருவார்கள். உனது ராசிக்கு மாதந்தோறும் அர்ச்சனை செய்துவருகிறேன்” என்று சொல்லிவிட்டு, புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றுள்ளார். இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.