1. home
  2. > national
  3. > Punjab extends Assembly session to negate Centre's farm laws
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

நீலகிரியில் களைகட்டும் பழக்கண்காட்சி!

May 25, 2019 19:24 IST

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது. சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆ ண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் கண்காட்சி 61வது பழக் கண்காட்சி ஆகும்.61 வது பழக் கண்காட்சி இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பழங்களால் ஆன வரவேற்பு வளையம் அமைக்கப்படுகிறது. பூங்காவினுள் நுழைவு வாயில் அருகில் ஒன்னறைடன் ஆரஞ்சு திராட்சை போன்ற பழங்களை கொண்டு சுற்றுலா பயணிகளை கவர வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் அமைக்கப்படுகிறது. பழக் கண்காட்சியில் தீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை தவிர கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, தேனி, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி, கடலூர் ஆகிய வெளி மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் பங்குகொள்கின்றனர். அவர்கள் தங்கள் மாவட்டத்தின் சிறப்பு களை பழங்கள் மூலம் வடிவமைக்கிறார்கள். வழக்கமாக பழக் கண்காட் யில் பழங்கள் அறுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கபபடும். இதனால் பழங்கள் அதிக சேதம் ஏற்ப்பட்டு வீணாகியது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு புதிய முறை கையாளப்படுகிறது.இந்த வகையில் பழங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் நூலில் பழங்களை கட்டி அலங்கரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

National