சிறுமி வன்கொடுமை : பொதுமக்கள் மத்தியில் போலீசார் தண்டனை! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சிறுமி வன்கொடுமை : பொதுமக்கள் மத்தியில் போலீசார் தண்டனை!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சிறுமி வன்கொடுமை : பொதுமக்கள் மத்தியில் போலீசார் தண்டனை!

Nov 28, 2019 17:13 IST

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் பொது மக்கள் மத்தியில் சரமாரியாக லத்தியால் தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் அந்த நபர் கதறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட, ஆய்வறிக்கையில், 2017 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 3.59 லட்சம் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சென்னையில் 7வயது சிறுமி ஹாசினி, துடியலூர் சிறுமி ஆகியோர் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆந்திராவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 25 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சித்தூர் மாவட்டம் குராபலகோட்டா மண்டலத்தில் உள்ள செனதநகரைச் சேர்ந்த சிறுமி பில்லேறுவில் உள்ள அரசினர் விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் விடுமுறைக்காகத் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார், சனிக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீரபத்ரையா (25) என்ற நபர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மீண்டும் அழைத்து வந்து சிறுமி விளையாடிக் கொண்டிருந்த கோயிலின் அருகிலேயே விட்டுச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்ததும் உடனடியாக தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் கடந்த 24ஆம் தேதி இதுகுறித்து காளிகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக குற்றவாளியைக் கைது செய்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அந்த சிறுமி படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், சிறுமையை வன்கொடுமைக்கு ஆளாக்கியவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதியிலேயே பதுங்கியிருந்த வீரபத்ரையாவை கண்டறிந்த பொது மக்கள் அவரை அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்கள் பிடியிலிருந்த வீரபத்ரையாவை கைது செய்தனர். அப்போது தப்பி ஓட முயன்றதால் போலீசார் பொதுமக்கள் முன்னிலையிலேயே லத்தியால் சரமாரியாகத் தாக்கினர். இதனை சிலர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அடி தாங்க முடியாமல் கதறுவது பதிவாகியுள்ளது. தற்போது அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.