டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுக்குத் தாவும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுக்குத் தாவும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுக்குத் தாவும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்!

Nov 28, 2019 17:09 IST

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. "உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 26 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்டத் தலைவர்களும் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பெற்ற விருப்ப மனுக்கள், விருப்ப மனுக்களுக்கான கட்டணம் ஆகியவற்றை தலைமையிடம் ஒப்படைப்பதற்கான நிகழ்ச்சிதான் இது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் மாவட்டமாக விருப்ப மனு மூலம் சுமார் 3.5 லட்ச ரூபாய் திரட்டி தலைமையிடம் ஒப்படைத்தது. அதற்கு அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்ச ரூபாய் விருப்ப மனு மூலம் திரட்டப்பட்டது. இப்படி அனைத்து மாவட்டங்களையும் சேர்த்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விருப்ப மனு கட்டணம் திரட்டப்பட்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாவட்டமாக விருப்ப மனுத் தொகை திரட்டப்பட்டு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதன் பின் பேசினார் கே.எஸ். அழகிரி. அப்போது தன் பேச்சில் அழகிரி குறிப்பிட்ட விஷயம்தான் பல மாவட்டத் தலைவர்களை அதிர வைத்துள்ளது. ‘விரைவில் தமிழக காங்கிரசின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவார்கள்’ என்று அந்த கூட்டத்தில் அறிவித்தார் அழகிரி. இது இப்போதைய பல தலைவர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே காங்கிரஸ் கட்சியில் புதிதாக ஒரு மாநிலத் தலைவர் வந்ததும் தனக்கு ஒத்துழைக்கும்படியான மாவட்டத் தலைவர்களை நியமித்துக் கொள்ளுவார்கள். ஆனால் சிறப்பாக உழைக்கும் சில மாவட்டத் தலைவர்களை பெரும்பாலும் மாற்றுவதில்லை. ஆனால் அழகிரி விரைவில் மாவட்டத் தலைவர்களை தன் தோதுக்கு நியமிக்கும் பணிகளில் இறங்கிவிட்டார். இது தொடர்பாக இந்தக் கூட்டத்திலேயே சில மாவட்டத் தலைவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதங்கள் நடந்தன. இதன் எதிரொலியாக அழகிரியின் மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்டத் தலைவர்கள் சிலர் அதிமுகவில் சேரத் தயாராகிவிட்டனர். மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுவிட்டால் அப்புறம் அதிமுகவில் செல்வாக்கோடு சேர முடியாமல் போய்விடுமென்பதால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் சிலர் அமைச்சர் வேலுமணியிடம் பேசி முதல்வர் எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். அதேபோல நெல்லை மண்டலம், தஞ்சை மண்டலத்திலும் கூட சில மாவட்டத் தலைவர்கள் அதிமுகவுக்குச் செல்ல முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள். இதையெல்லாம் அறிந்துகொண்ட அழகிரி இப்போதைக்கு மாவட்டத் தலைவர்களை மாற்றலாமா வேண்டாமா என்று யோசித்து வருகிறார்”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். .