பொட்டு அம்மன் வீட்டில் இட்லி சாப்பிட்டேன்: சீமான் | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > பொட்டு அம்மன் வீட்டில் இட்லி சாப்பிட்டேன்: சீமான்
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

பொட்டு அம்மன் வீட்டில் இட்லி சாப்பிட்டேன்: சீமான்

Nov 27, 2019 18:40 IST

இலங்கை சென்றபோது தனக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் குறித்த தகவலை சீமான் கட்சியினருடன் பகிர்ந்துகொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ‘நவம்பர் -26-தமிழர்களின் எழுச்சி நாள்’ என்ற தலைப்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா சென்னை போரூரில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்புரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கை சென்றிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். “என்னை இறுதிப் போரின்போது அழைத்தார்கள். அங்கு என்னை பாதுகாப்பதே அவர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. சுற்றிலும் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் நான் அங்கு சென்றபோதும், எனக்கு உணவு அளித்து உபசரித்தனர். நான் சாப்பிடும்போது பின்னால் இருந்து ஒருவர் எதையெல்லாம் சாப்பிடுகிறேன் என ஒரு நோட்டில் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். இந்த கூட்டை நன்றாக சாப்பிட்டார், இந்த கறியை அவர் தொடவே இல்லை, சாம்பார் ஊற்றிக்கொண்டார் என அவர் எழுதிக்கொண்டிருந்தார். முதல் நாள் நடந்தது, இரண்டாவது நாள் நடந்தது. மூன்றாவது நாள் அவரிடமே கேட்டுவிட்டேன். அண்ணனுக்கு (பிரபாகரன்) அனுப்ப வேண்டும், அதற்காக எழுதுகிறேன் என்று அவர் சொன்னார். ஒரு தலைவன், தன் தம்பி என்ன சாப்பிடுகிறான் என்று அனுப்பச் சொல்கிறார் என்றால் நினைத்துப் பாருங்கள்” என்று குறிப்பிட்ட சீமான், பிரபாகரன் தளபதியான பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிட்ட அனுபவங்களையும் கூறினார். “ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நான், தம்பி சிரஞ்சீவி, பொட்டு அம்மன், அவரது துணைவியார் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்துவைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு ‘இட்லியா...அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ‘ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான்’ என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாக சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர்” என்றும் பேசினார். பிரபாகரனுடன் சாப்பிட்ட நினைவுகளை பகிர்ந்த சீமான், “தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” என்று குறிப்பிட்டார். சீமான் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.