திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி அவமதிப்பு!

home > திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி அவமதிப்பு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி அவமதிப்பு!

Nov 04, 2019 18:16 IST

தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சாணியை வீசி அவமதித்துள்ளனர். பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாகத் தாய்லாந்து சென்றுள்ளார். கடந்த 2ஆம் தேதி பாங்காக்கில் இந்தியர்களுடனான உரையாடலின் போது தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். ’தாளாற்றித் தந்த பொருளெல்லாம்’ என தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசினார். இந்தநிலையில் நேற்று (நவம்பர் 3) தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருந்த புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன், ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்ற குறளும் பதிவிடப்பட்டிருந்தது. கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களைப் பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?. அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்ட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வள்ளுவரைக் காவி உடையில் பதிவிட்ட பாஜகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். திருக்குறளைப் படித்துத் திருந்துங்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார். இதையடுத்து திருவள்ளுவரின் உண்மையான உடை காவிதான் என்றும், அதற்கு வெள்ளை அடித்தது திமுக தான் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தஞ்சையில் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் சாணி வீசியும், கண்களை கறுப்பு காகிதத்தால் மறைத்தும் அவமதித்துச் சென்றுள்ளனர். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் எப்போதும் மரியாதை உள்ள நிலையில், இது போன்று சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருப்பதைக் கண்ட மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சிலையைக் கழுவி சுத்தம் செய்தனர். திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படவில்லை. சிலை மீது சாணம் வீசி சென்றவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலை அவமதிப்பு செய்யப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவமதிப்பு செயலுக்கு திமுக எம்.பி.கனிமொழி, “வள்ளுவர் சிலையைச் சேதப்படுத்தலாம். ஆனால் அதைச் செய்த மூடர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையைச் சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.