தீஸ்ஹசாரி: வழக்கறிஞர்கள், போலீசார் மோதல் வீடியோ!

home > தீஸ்ஹசாரி: வழக்கறிஞர்கள், போலீசார் மோதல் வீடியோ!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

தீஸ்ஹசாரி: வழக்கறிஞர்கள், போலீசார் மோதல் வீடியோ!

Nov 04, 2019 12:17 IST

டெல்லி தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பார் கவுன்சில் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் குழு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. அப்போது வழக்கறிஞர்கள் சிலரை லாக் அப்புக்கு போலீசார் இழுத்து செல்ல முற்பட்டதாகவும், இதற்கிடையில் வழக்கறிஞர்கள் சிலர் அங்கிருந்த சில வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவத்தில் உள்ளிருந்த வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்களைக் கூட தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஏற்பட்ட பார்க்கிங் பிரச்சினை தொடர்பாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. இந்த மோதலில் பல வாகனங்கள் தீக்கிரையாகின. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க டெல்லி காவல் துறை, இந்திய பார் கவுன்சில், டெல்லி பார் கவுன்சில், டெல்லி அரசு, டெல்லி வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பவத்திற்குத் தொடர்புடைய அனைத்து காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி படெல் உத்தரவிட்டுள்ளார், அதுபோன்று, இதுகுறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி மாவட்ட நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி காவல் ஆணையரை அழைத்து இந்த மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டனர். இதற்கிடையே தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தின் தலைமை கூடுதல் அமர்வு நீதிபதி பிங்கி இன்று காலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். வழக்கறிஞர்களும், போலீசார்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டும் நிலையில், சிறப்பு விசாரணைக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 307 (கொலை முயற்சி), 186 (அரசு ஊழியரைத் தடுப்பது), 353 (அரசு ஊழியர் மீது தாக்குதல்) மற்றும் 427 (சேதத்தை ஏற்படுத்துதல்) பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமிருந்தும் (போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள்) பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் குறித்த இரு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒன்றில் கூட்டாகக் காவல் நிலையத்துக்குள் நுழையும் வழக்கறிஞர்கள், ஒரு காவல்துறை அதிகாரியை மட்டும் இழுத்து கடுமையாகத் தாக்கிவிட்டுச் செல்கின்றனர். இறுதியாக அந்த அதிகாரி தரையில் விழுந்து கிடப்பது வரை பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், ஒரு வழக்கறிஞரை மட்டும் போலீசார் அடித்து இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இதற்கிடையில், மோதலில் படுகாயமடைந்து அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 2 வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.2 லட்சம் டெல்லி வழக்கறிஞர்கள் குழு வழங்கியுள்ளது. படுகாயமடைந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளது.