சிசுவை நான் காப்பாத்துறேன்டா... -சத்திய வாக்கு என்னாச்சு? வீடியோ! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சிசுவை நான் காப்பாத்துறேன்டா... -சத்திய வாக்கு என்னாச்சு? வீடியோ!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சிசுவை நான் காப்பாத்துறேன்டா... -சத்திய வாக்கு என்னாச்சு? வீடியோ!

Oct 31, 2019 15:41 IST

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மாலை விழுந்த சுஜித் என்ற இரு வயது பாலகனின் மரணம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துவிட்டது. 29 ஆம் தேதி வரை பல்வேறு வகைகளில் மீட்புப் பணிகள் செய்தும் அந்தக் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. நடுக்காட்டுப்பட்டியில் பல்வேறு இயந்திரங்களுடன் முயற்சி, பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் என்று நடந்துகொண்டிருந்த நிலையில்... சாமி வந்த ஒரு பெண்ணிடம் சுஜித்தை காப்பாற்றும்படி வேண்டுகோள் வைத்த ஒருவர் அந்த வீடியோவை இப்போது சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார். மஞ்சள் சேலைக் கட்டிக்கொண்டு கையில் வேப்பிலைக் கொத்தோடு காட்சி தரும் அந்த பெண்ணிடம், “எத்தனையோ மக்கள் வேண்டுது. அந்த குழந்தைய காப்பாத்திக் கொடும்மா. பெத்த அம்மா மட்டுமில்ல, லட்சக்கணக்கான மக்கள் வேண்டுதும்மா” என்று வேண்டுகிறார் அதற்கு அந்தப் பெண், “நான் காப்பாத்துறேன்டா,.... இப்பவே காப்பாத்துறேன்டா எல்லாரையும் காப்பாத்துறேன்டா... எத்தனையோ மானிட ஜென்மத்தை காப்பாத்துறேன். இந்த சிசுவையும் நான் காப்பாத்துறேன்டா..” என்று ஓங்கிச் சொல்கிறார் அந்தப் பெண். “நான் வணங்குற ப்ரத்யங்காதேவி உண்மைன்னா அந்தக் குழந்தைய காப்பாத்தும்மா” என்று மீண்டும் அந்த நபர் கேட்க, இந்த ப்ரத்யங்கராதேவி சொல்றேன்டா... நான் காப்பாத்துறேன்டா...சத்திய வாக்கு கொடுக்குறேன் நான் காப்பாத்துறேன்டா...” என்று உறுதியாகச் சொல்லுகிறார் அந்தப் பெண். தன்னை அம்மனின் வடிவாக அறிவித்துக் கொள்ளும் அந்தப் பெண்ணாலும் கடைசி வரை சுஜித்தைக் காப்பாற்ற முடியவில்லை. எனினும் இந்த வீடியோ சமூக தளங்களில் உலவி வருகிறது. ப்ரத்யங்கரா தேவி சக்தி வாய்ந்த அம்மன்களில் ஒருவராக ஆன்மிக உலகில் நம்பப்படும் பெண் தெய்வம். காளியின் வடிவாக கருதப்படும் இந்த அம்மனுக்கு மிளகாய் எரித்து யாகம் செய்தால் எவ்வித தீவினையும் அகலும் என்பது நம்பிக்கை.