நாங்குநேரி: அதிமுகவின் சாதிச் சடுகுடு! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > நாங்குநேரி: அதிமுகவின் சாதிச் சடுகுடு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

நாங்குநேரி: அதிமுகவின் சாதிச் சடுகுடு!

Sep 30, 2019 16:35 IST

நாங்குநேரி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அணியில் லேசாகத் தொடங்கிய சலசலப்பு இப்போது முற்றி முதிரத் தொடங்கியிருக்கிறது. எங்களை சந்தித்து ஆதரவு கேட்டால் முடிவு செய்வோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறிய பிறகே விஜயகாந்தை அமைச்சர்கள் சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். அதேபோல பாஜகவோ, அதிமுகவுக்கான ஆதரவு பற்றி முடிவு செய்யவில்லை என்று நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை இடைத்தேர்தல் விவகாரத்தில் அமைதியாகவே உள்ளார். அவரையும் அதிமுக தலைவர்கள் தேடிச் சென்று சந்திக்கவில்லை. இதுபற்றி நாங்குநேரி தொகுதியில் விசாரித்தபோது, “விக்கிரவாண்டி தொகுதியில் புதிய தமிழகத்தின் ஆதரவு என்பது அதிமுகவுக்கு ஒரு பொருட்டு அல்ல. ஏனெனில் அங்கே புதிய தமிழகத்துக்கு அடிப்படை இல்லை. ஆனால், தென் மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியில் தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு பத்து சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய வாக்கு வங்கியாக தேவேந்திர கு