முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்! | Editorji
editorji
/Assets/images/logo/Punchline_v2.png
download editorji appgoogle apple
  1. home
  2. > Minnambalam
  3. > முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்!
prev icon/Assets/images/svg/play_white.svgnext button of playermute button of playermaximize icon
mute icontap to unmute
video play icon
00:00/00:00
prev iconplay paus iconnext iconmute iconmaximize icon
close_white icon

முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்!

Aug 29, 2019 15:20 IST

வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆகஸ்ட் 28) லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து இகே 547 எண் கொண்ட விமானத்தில் குவைத் சென்ற முதல்வர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். முதல்வரை வழியனுப்புவதற்காக துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் எம்.பி ரவீந்திரநாத் குமாரும் நேற்று விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். விஐபி வெயிட்டிங் ஹாலில் அமைச்சர்கள் சுற்றி நின்றுகொண்டிருக்க எடப்பாடியும் பன்னீர்செல்வமும் மட்டும் சிறிது நேரம் உரையாடியுள்ளனர். எடப்பாடி விமானம் ஏறியதும் பன்னீர்செல்வம் மதுரை செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே விமான நிலையத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், காவல் துறை துணை ஆணையருடன் மோதலில் ஈடுபட்ட விவகாரமும் கவனம் பெற்றிருக்கிறது. முதல்வர் வெளிநாடு செல்லும் நிலையில், அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி விமான நிலையத்தில் அதுதொடர்பான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது முதல்வரின் காரைப் பின் தொடர்ந்து அமைச்சர்கள் கார் ஒவ்வொன்றாக வந்துள்ளது. கார்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக்கொண்டிருந்த முத்துசாமி, அமைச்சர் கார் அல்லாத அதிமுக கொடி கட்டிய கார் ஒன்று வந்தபோது அதை வழிமறித்து நிறுத்தியிருக்கிறார். இதைப் பார்த்து டென்ஷனான சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனது காரிலிருந்து இறங்கி வந்த முத்துசாமியை நோக்கி, ‘யோவ் ஏன்யா அந்த வண்டிய நிறுத்துற. உனக்கு வேற வேலையே இல்லையா... வண்டிய விடுய்யா’ என்று சொல்லி சில காரமான வார்த்தைகளையும் வீசியிருக்கிறார். அமைச்சரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முத்துசாமி, அமைதியாகி ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றிருக்கிறார். சுமார் 4 நிமிடங்கள் வரை இந்தச் சலசலப்பு நீண்டிருக்கிறது. அதன் பின்னர் அந்த காரை பின் தொடரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் சண்முகம். இதுதொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் முத்துசாமி. அவர் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற சமயத்தில் ஜெ. பாதுகாப்பு அதிகாரி பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அந்த இடத்தில் மனோகரன் நியமிக்கப்பட்டார். ஆனால், முத்துசாமிதான் தனக்குப் பாதுகாப்பு அதிகாரியாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவே அவரை மீண்டும் அழைத்துக்கொண்டார். அந்த அளவு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக முத்துசாமி இருந்துள்ளார். முன்பு ஜெயலலிதாவைச் சந்திக்க சி.வி.சண்முகம் சென்றிருந்தபோது, அவருக்கும் முத்துசாமிக்கும் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்போது நடந்ததை மனத்தில் வைத்துக்கொண்டே சி.வி.சண்முகம், துணை ஆணையர் என்றும் பாராமல் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார்கள். அதிமுக தரப்பில் விசாரித்தால், “வழக்கமாகவே அமைச்சர் சி.வி.சண்முகம் கோபப்படுவார். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி அதற்கு சிகிச்சை பெற்றுவருகிறார். அதிலிருந்தே சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுகிறார். நேற்று நடந்த நிகழ்ச்சியும் அதுபோல்தான்” என்கிறார்கள் கூலாக. ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவரை, அனைவரின் முன்னிலையிலும் அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்!

1/3

முதல்வர் சுற்றுப்பயணம்: காவல் துறை அதிகாரியுடன் மோதிய அமைச்சர்!

IPAC List To DMK - Digital Thinnai

2/3

IPAC List To DMK - Digital Thinnai

Effects of Lockdown - J.Jeyaranjan

3/3

Effects of Lockdown - J.Jeyaranjan

Partners

video play iconPrakash Padukone with Sadhguru

Prakash Padukone with Sadhguru

Jul 24, 2021 16:30 IST