ஹர்பஜன் அட்மினின் அதிரடி வளர்ச்சி!

  1. home
  2. > Minnambalam
  3. > ஹர்பஜன் அட்மினின் அதிரடி வளர்ச்சி!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

ஹர்பஜன் அட்மினின் அதிரடி வளர்ச்சி!

Aug 03, 2019 19:04 IST

‘ஹர்பஜன் சிங்கின் தமிழ்’ அப்படின்னு தனியொரு புத்தகமே போடும் அளவுக்கு, அவருடைய டிவிட்டர் அக்கவுண்ட் கண்டெண்ட் நிறைஞ்சதா இருக்கு. அப்படிப்பட்ட கண்டெண்டுக்கு நடுவுல, திடீர்னு ஒரு அறிவிப்பு வெளியாகி டிவிட்டர் குருவியை ஒரு நிமிஷம் திரும்பி பார்க்க வெச்சுது. “என் மூலமாக தமிழ் சினிமா விளம்பரங்கள், ஒப்பந்தங்கள்,வியாபாரம்,சமூக வலைதள விளம்பரங்கள் செய்ய விரும்பினால், என் அன்பு தம்பி சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன்-ஐ அணுகவும்” என்பது தான் அந்தப் பதிவு. ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் அக்கவுண்டை சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் ஹேண்டில் பண்றார்னு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும், அவர் பெயருடன் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு உண்மையாகவே அவர் போஸ்ட் செய்தது தானா அல்லது யாராவது ஹேக் பண்ணிட்டாங்களான்னு தெரிஞ்சிக்க அவருக்கே ஃபோன் போட்டு கேட்டப்ப, “ஹர்பஜன் சிங்கை இண்டர்வியூ எடுக்கணும்னா மட்டுமில்லைங்க. என்னை இண்டர்வியூ எடுக்கணும்னாலும் சார்ஜ் பண்ணுவோம்” என்று அவர் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கியதிலிருந்தே ஹர்பஜன் சிங், தன்னை ஒரு பிராண்ட் மாடலா வெளிப்படுத்தத் தொடங்கிட்டார். தன்னை விளம்பரத்துக்காக காண்டாக்ட் பண்றவங்க எல்லாரையும் ஒரு டீம் வெச்சு எல்லா கணக்கையும் ஃபாலோ செய்றார். அது இந்தியாவின் மற்ற பகுதியிலிருந்து வருபவர்களுக்கு பிரச்சினையை கொடுக்கலைன்னாலும், தமிழ்நாட்டை டார்கெட்டா வெச்சு விளம்பரம் ரெடி பண்றவங்களுக்கு; முக்கியமா தமிழ் சினிமா அட்வர்டைஸர்களுக்கு பெரும் பிரச்சினையா இருந்தது, யாரை காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாதது தான். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியே, ஹர்பஜன் சிங் தரப்பிலிருந்து சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியன் அடங்கிய டீமை இந்த வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. பொறியாளரான சரவணன் பாண்டியன் கிரிக்கெட் ஆர்வலர். அதனாலேயே ஹர்பஜன் சிங் சொல்ல நினைக்கும் விஷயங்களை, அவரால் எளிதில் சுந்தரத் தமிழில் சொல்ல முடியுது. ஹர்பஜன் சிங் ஒரு விளம்பரத்துக்கு எவ்வளவு பணம் வாங்குவாருன்றது, அந்த விளம்பரத்தோட பட்ஜெட்டைப் பொறுத்தது தான். ஆனால், தன்னை இண்டர்வியூ எடுக்கணும்னாலும் பணம் கொடுக்கணும்னு சொல்றார். ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற தமிழ்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களை அடிப்படையா கொண்ட பிராண்டை வெச்சு வளரும்போது, ஹர்பஜன் என்ற பிராண்டை வெச்சு தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர் நல்ல நிலைக்கு வர்றதும் நல்லது தான். சின்னாளப்பட்டி சரவணன் பாண்டியனின் வளர்ச்சி, டிஜிட்டல் காலத்து இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்கும். என்னதான் பெயர்,புகழ் என எத்தனையோ பேர் இருந்தாலும், மிக குறுகிய காலத்துல, டிஜிட்டல் தளங்களை சரியான முறையில் பயன்படுத்தி வளர்ச்சியடையவும் வழி இருக்குன்றதை சரவணன் பாண்டியன் மாதிரியான இளைஞர்கள் நிரூபிச்சிக்கிட்டே இருக்காங்க.