உணவுக்கு மதமில்லை: இந்தியர்களுக்கு விருந்து வைத்த சொமட்டோ!

home > உணவுக்கு மதமில்லை: இந்தியர்களுக்கு விருந்து வைத்த சொமட்டோ!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

உணவுக்கு மதமில்லை: இந்தியர்களுக்கு விருந்து வைத்த சொமட்டோ!

Aug 01, 2019 14:08 IST

ஆர்டர் செய்த உணவை வேறு மதத்தைச் சேர்ந்தவர் எடுத்துவந்ததால் பிரச்சினை கிளப்பியவருக்கு சொமட்டோ நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த பண்டிட் அமித் சுக்லா எனும் வாடிக்கையாளர், பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது, அவர் உணவு ஆர்டர் செய்த ஹோட்டலிலிருந்து, யார் உணவைப் பெற்றுக் கொண்டு வருவார் என்பதை தெரிந்துகொள்ள டெலிவரி பாய் பெயரை அவருக்கு சொமட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைக்கண்ட அந்த வாடிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் சொமட்டோ இந்தியா ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, “இந்து அல்லாத ஒருவரை எனக்கு உணவை டெலிவரி செய்ய சொல்லியிருக்கிறார்கள். உணவு டெலிவரி செய்யும் நபரை மாற்ற சொல்லியும் அவர்கள் மாற்ற மறுத்துவிட்டனர். எனவே, உணவு ஆர்டர் செய்ததை ரத்து செய்துவிட்டேன். பணத்தையும் திரும்பித் தர மறுத்துவிட்டனர். என்னை உணவை ஏற்றுக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். “சொமட்டோவுடனான இந்த உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இவ்விவகாரத்தை வழக்கறிஞர் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எடுத்து செல்வேன். இந்து அல்லாத ஒருவர் எனக்கு உணவு கொண்டுவருவதை நான் விரும்பவில்லை” என்று சொமட்டோ சேவை மையத்துக்கு அனுப்பியிருக்கிறார். தற்போது மதம் தொடர்பான இந்தப் பிரச்சினையைக் கிளப்பிய அந்த நபருக்கு சொமட்டோ நிறுவனம் தக்க பதிலடி கொடுத்துள்ளது, உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், “உணவுக்கு மதம் இல்லை. என்ன சமைக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பம். எல்லா மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கான வாய்ப்பையும் நாங்கள் தருகிறோம். ஜெயின் உணவு, வேகன் உணவு, நவ்ராத்ரா தாலிஸ், ஹலால் முறையில் வெட்டப்பட்ட இறைச்சி உணவு போன்றவற்றை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவரவர் விருப்பத்துக்கேற்ப தருகிறோம்” என்று கூறியுள்ளது. இதற்கிடையே சொமட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், “தேசத்தை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்ட்னர்களின் பன்முகத் தன்மையை மதிக்கிறோம். எங்கள் கொள்கைக்கு எதிரான இந்த வர்த்தக வாய்ப்பை இழந்ததற்காக நாங்கள் வருத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். சொமட்டோவின் பதிவுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, “தீபிந்தர் கோயலுக்கு சல்யூட். இந்தியாவின் உண்மையான முகம் நீங்கள்தான்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ட்விட்டரில் பண்டிட் அமித் சுக்லாவுக்கு அறிவுரை சொல்லியும் கண்டனம் தெரிவித்தும் பலர் பதிவிட்டு வருகின்றனர். “முதலில் உங்கள் பெயரிலிருந்து பண்டிட் என்ற வார்த்தையை நீக்கிவிடுங்கள். ஏனெனில் உங்களிடம் அறிவு, பண்பு, பெருந்தன்மை எதுவுமே இல்லையே?” என்று கரன்பீர் சிங் என்பவர் பதிவிட்டிருக்கிறார். ரியா என்பவரின் ட்விட்டர் பதிவில், “நீங்கள் உங்கள் வாகனத்திலும் பெட்ரோல் நிரப்பக் கூடாதே... ஏனெனில் இந்தியாவின் பெரும்பகுதி பெட்ரோல் முஸ்லிம் நாடுகளான வளைகுடா நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. ஒரே ஓர் உணவு ஆர்டர் மூலம் இந்தியர்களின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தனிப்பெரும் உணர்வுக்கு விருந்து வைத்திருக்கிறது சொமட்டோ.