விஜய்யுடன் மீண்டும் மோதவுள்ளாரா தனுஷ்? | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > விஜய்யுடன் மீண்டும் மோதவுள்ளாரா தனுஷ்?
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

விஜய்யுடன் மீண்டும் மோதவுள்ளாரா தனுஷ்?

Jul 29, 2019 19:31 IST

தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் திரைப்படமும் தீபாவளிப் பண்டிகையை குறி வைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் பிகில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான சிங்கப்பெண்ணே பாடல் வைரலானது. இப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்டர்கள், பாடல்களை வெளியிட்டு புரொமோஷன் பணிகளில் ஒருபக்கம் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது படக்குழு. இந்நிலையில், நேற்று(ஜூலை 28) தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பட்டாஸ் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அப்பா-மகன் என இருவேடங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். அப்பா கதாபாத்திரத்திற்கு சினேகா நாயகியாகவும், மகன் கதாபாத்திரத்திற்கு மெஹ்ரீன் பிர்ஸாதா நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இப்படத்தை தயாரித்து வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ், பட்டாஸ் என்ற படத்தின் தலைப்பிற்கேற்ப தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. 6ஆவது முறையாக பண்டிகையில் மோதும் விஜய்-தனுஷ் தற்போது வரை ஐந்து முறை விஜய்-தனுஷ் படங்கள் ஒரே தேதியில் வெளியாகியிருக்கின்றன. அவையனைத்தும் பண்டிகையை குறிவைத்தே ரிலீஸாகியும் இருக்கின்றன. திருப்பாச்சி-தேவதையைக் கண்டேன்(பொங்கல், 2005), சிவகாசி-அது ஒரு கனாக்காலம்(தீபாவளி, 2005), அழகிய தமிழ் மகன் - பொல்லாதவன்(தீபாவளி, 2007), வில்லு-படிக்காதவன்(பொங்கல், 2009), காவலன் - ஆடுகளம் (பொங்கல்-2011) ஆகிய படங்களைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் இந்த தீபாவளிக்கு இருவரது படமும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கால்பந்து Vs தற்காப்புக் கலை பிகில் படத்தில் விஜய்யும், பட்டாஸ் படத்தில் தனுஷும் விளையாட்டை மையப்படுத்திய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பிகில் படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் என்பதை நாம் அறிவோம். அதே சமயம், பட்டாஸ் படத்தில் தனுஷ் சோழர்கள் பயிற்சி பெற்ற தற்காப்புக் கலையை பின்பற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொன்மையான தற்காப்புக்கலையாக அறியப்படும் களரியை விட சோழர்களின் தற்காப்புக் கலை மிகப் பழமையானது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார். இதற்காக தனுஷ், சினேகா இருவருமே இக்கலையை முறையாகப் பயின்றுள்ளார்களாம். இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டதை எட்டியுள்ள நிலையில், தீபாவளி பரபரப்பை இப்போதே பற்றவைத்து விட்டார்கள்.