பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி வகுப்புகள்! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி வகுப்புகள்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி வகுப்புகள்!

Jul 29, 2019 11:10 IST

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சிறப்பு வகுப்புகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி வகுப்புகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டுமென்று கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் நாடாளுமன்றக் குழு அலுவலகத்திலிருந்து அனைத்து எம்.பி.க்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. அச்செய்தியில், ‘அப்யாஸ் வர்கா’ என தலைப்பிடப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் எம்.பி.க்கள் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு விவகாரங்கள், தலைப்புகள் குறித்து எம்.பி.க்களுக்கு நரேந்திர மோடியும், அமித் ஷாவும் விரிவுரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.