காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு!

May 30, 2019 15:42 IST

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைமை தடை விதித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதையடுத்து பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக உறுதியாக இருப்பதாகவும், அவரை சமாதானப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. தோல்விக்கான காரணம் குறித்து ஆராயக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் ராகுல் காந்தி பதவி விலகுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே வரும் ஜூன் 1ஆம் தேதி காங்கிரஸ் நாடாளுமன்ற குழு நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற குழு தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்குத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று (மே 30) தனது ட்விட்டர் பக்கத்தில், “தொலைக்காட்சி விவாதங்களுக்குச் செய்தித் தொடர்பாளர்களை அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் விவாதங்களுக்காகக் காங்கிரஸ் பிரதிநிதிகளை அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதோடு, இந்த தடை ஒரு மாதத்துக்கு நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.