மீண்டும் வாக்குச் சீட்டு: வலியுறுத்தும் தினகரன் | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > மீண்டும் வாக்குச் சீட்டு: வலியுறுத்தும் தினகரன்
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

மீண்டும் வாக்குச் சீட்டு: வலியுறுத்தும் தினகரன்

May 30, 2019 10:54 IST

அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று (மே 28) பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையே வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “89 முதல் 2016 வரை பல தேர்தல்களை அம்மாவுடன் சந்தித்தவர் சின்னம்மா( சசிகலா). அவரை சந்தித்து தேர்தல் முடிவுகள் பற்றி பேசினோம். இதனால் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து சிறப்போடு செயல்படுங்கள்’ என்று சொன்னார்கள். அவரிடம் அமமுகவுக்காக விழுந்த வாக்குகள் காணாமல் போனதை பல்வேறு இடங்களில் நடந்தவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னேன். தேனி தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடுக்கப் போவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாங்களும் ஆதாரங்களை சேகரித்து அந்த வழக்கை வலுவான வழக்காக மாற்றுவோம்” என்ற தினகரனிடம் வாக்குச் சீட்டு முறை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அபபோது அவர், “என்னதான் எலக்ட்ரானிக் மெஷின் என்றாலும் டிஜிட்டல் முறையில் அவற்றில் முறைகேடுகள் நடக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இதை சந்திரபாபு நாயுடு எழுப்பினார். இன்றும் வளர்ந்த நாடுகளில் கூட வாக்குச் சீட்டு முறைதான் நடைமுறையில் இருக்கிறது. எனவே இனியாவது நாம் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும். இப்போது எங்கள் வாக்குகள் எங்கே என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அதற்கான தெளிவான ஆதாரங்களை சேகரிப்போம். எப்போதுமே தவறு செய்பவர்கள் 100 சதவிகிதம் தடயத்தை அழிக்க முடியாது. எனவே தெளிவான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமே வேண்டாம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். இதுபற்றி பல கட்சிகளுடனும் பேசுவோம். என்னைப் பொறுத்தவரை இப்போது கிடைத்திருப்பது எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினுக்கான வெற்றி” என்று கூறினார் தினகரன்.