உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - பாகிஸ்தான் அணி | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - பாகிஸ்தான் அணி
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! - பாகிஸ்தான் அணி

May 29, 2019 15:43 IST

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று, இந்திய அணியின் நீண்டகால விரோதியாக ரசிகர்களால் கருதப்படும் பாகிஸ்தான் அணியின் நிறை குறைகள் குறித்துக் காண்போம். பாகிஸ்தான் அணி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் எப்போதுமே விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆட்டத்தின் கடைசிப் பந்து வரை எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடும். அதுவும் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோற்றதே இல்லை என்ற பெயரை இந்தியா தக்கவைக்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இரு அணிகளும் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராகத் தோல்வியுற்றாலும் எதிரெதிரே விளையாடு