அரவக்குறிச்சி: செந்தில்பாலாஜிக்காக சபரீசன் நடத்திய பஞ்சாயத்து! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > அரவக்குறிச்சி: செந்தில்பாலாஜிக்காக சபரீசன் நடத்திய பஞ்சாயத்து!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

அரவக்குறிச்சி: செந்தில்பாலாஜிக்காக சபரீசன் நடத்திய பஞ்சாயத்து!

Apr 30, 2019 13:28 IST

இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் அங்கே திமுக வேட்பாளர். ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என தீச்சட்டி ஏந்தியவர்தான் செந்தில்பாலாஜி. இப்போது அணி மாறி திமுகவில் இருக்கிறார். இடையில் தினகரன் அணியிலும் இருந்தார் செந்தில்பாலாஜி. அதனால், அதிமுக, அமமுக, என இரண்டு கட்சியிலும் அடிமட்டத்தில் இருக்கும் பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறார். அதனால், இரண்டு கட்சியிலும் நடக்கும் அடுத்தடுத்த மூவ்கள் அத்தனையும் செந்தில்பாலாஜி கவனத்துக்கு வந்துவிடுகிறது. அரவக்குறிச்சி தொகுதியின் அமமுக பொறுப்பாளரான தனது நண்பர் பழனியப்பனோடு செந்தில்பாலாஜி இன்னும் செல்போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை மின்னம்பலத்தில் செய்தியாகவே வெளியிட்டிருந்தோம். திமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரனை தூக்கிவிட்டுத்தான் அந்த பொறுப்பு பாலாஜிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வெளியில் சிரித்தபடி இருந்தாலும் செந்தில்பாலாஜி மீது கோபத்தில்தான் இருக்கிறார் நன்னியூர். அவரும், அவரது ஆதரவாளர்களும் பெரிதாக செந்தில்பாலாஜிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருந்த செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள திமுக நண்பர் ஒருவர்தான் சபரீசனிடம் பேசுங்க.. என ஐடியா கொடுத்திருக்கிறார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் நெம்பருக்கு செந்தில்பாலாஜி மெசேஜ் போட, உடனடியாக லைனில் வந்திருக்கிறார் சபரீசன். ‘அதிமுகவிலும், அமமுகவிலும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் இருக்காங்க சார். இன்னும் எனக்காக ஓட்டுப் போடும் ஆட்கள் கூட எங்க தொகுதியில் இருக்காங்க. அமமுகவில் இருக்கும் பலரே எனக்கு ஓட்டுப் போடுவாங்க. இப்போ பிரச்னை அது இல்லை. நம்ம கட்சியில்தான் எனக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக நன்னியூர் ராஜேந்திரன் தரப்பு எந்த வேலையும் செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் எனக்கு எதிராகவும் சில இடங்களில் பேசிட்டு இருக்காங்க. அவரோட பதவியை தட்டிப்பறிக்கணும் என்பது என் எண்ணம் இல்லை. தளபதியாக பார்த்து எனக்கு கொடுத்த பொறுப்பு இது. ராஜேந்திரன் என் மீது அந்த கோபத்தில்தான் இருக்காரு. இதே நிலை நீடித்தால் என்னால் இந்தத் தொகுதியில் என்ன செய்ய முடியும்னு தெரியலை..’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சபரீசன், ‘நான் பார்த்துக்குறேன். நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்க பிரச்சாரத்தை கவனிங்க..’ என்று சொன்னாராம். நன்னியூர் ராஜேந்திரனுக்கு உடனடியாக போன் போயிருக்கிறது. சபரீசன்தான் பேசியிருக்கிறார். ‘கரூரில் நீங்க தனியாக அரசியல் பண்ணிட்டு இருக்கீங்களா? கட்சி என்ன சொல்லுதோ அதை செய்யுற மாதிரி, கேட்கிற மாதிரி இருந்தால் இங்கே இருங்க. இல்லைன்னா போய்டுங்க. உள்ளே இருந்துட்டு குடைச்சல் கொடுக்கிற வேலையெல்லாம் வேண்டாம். செந்தில்பாலாஜிக்கு எதிராக நீங்க வேலை பார்க்கிறதெல்லாம் ஆதாரத்தோடு இங்கே வந்துடுச்சு. அரவக்குறிச்சியில் மட்டும் செந்தில்பாலாஜி ஜெயிக்கலைன்னா நடக்கிறதே வேற. அவரை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. இல்லைன்னா நீங்க கட்சியிலேயே இருக்க மாட்டீங்க பார்த்துக்கோ...’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் சபரீசன். நன்னியூர் ராஜேந்திரன் என்ன சொல்கிறார் என்பதைக்கூடக் காதுகொடுத்துக் கேட்கவில்லையாம் சபரீசன். அதன் பிறகு ஸ்டாலினிடமிருந்தும் ராஜேந்திரனுக்குப் போன் போயிருக்கிறது. ‘கரூரில் இருந்து எனக்கு வரும் ரிப்போர்ட் எதுவும் சந்தோஷமா இல்லை. பார்த்து நடந்துக்கோங்க...’ என்று ஸ்டாலின் எச்சரித்ததாகச் சொல்கிறார்கள் கரூர் திமுகவில். இந்தப் பின்னணியில் அரவக்குறிச்சிக்கு சபரீசன் ஒரு டீமையும் அனுப்பி வைத்து என்ன அப்டேட் என்பதை உடனுக்குடன் அறிந்துவருகிறார்.