‘படி படி லேச்சே மனசு’ என்ற தெலுங்கு படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர் தர வேண்டிய சம்பள பாக்கியை நடிகை சாய் பல்லவி மறுத்துள்ளார். சென்றாண்டு இறுதியில் வெளியான சாய் பல்லவி ஷர்வானந்த் நடித்த படி படி லேச்சே மனசு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. அந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்த சாய் பல்லவி, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தால், தானே முன் வந்து ‘தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தர வேண்டாம், தற்போது தயாரிப்பாளராகிய உங்களுக்குத் தான் இது தேவைப்படும். தங்களால் எப்போது தர முடியுமோ அப்போது கொடுத்தால் போதும், இல்லையென்றாலும் பரவாயில்லை’ எனக் கூறியுள்ளார். இதனால் நெகிழ்ந்த தயாரிப்பாளர் தனது அடுத்த படத்திலும் சாய் பல்லவியையே கதாநாயகியாக தேர்ந்தெடுத்துள்ளார். கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை, அடுத்த படத்திற்கான முன்பணமாகக் கொடுத்திருக்கிறார். ‘விரத பர்வம் 1992’ என உருவாகும் படத்தில் ராணாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ‘நீடி நாடி ஒக்கே கதா’ என்ற படத்தை இயக்கிய வேணு உடுகுலா இப்படத்தை இயக்குகிறார்.