கோவை குண்டுவெடிப்பு: ஆயுள் கைதிக்கு பரோல் கேட்டு மனு!

  1. home
  2. > Minnambalam
  3. > கோவை குண்டுவெடிப்பு: ஆயுள் கைதிக்கு பரோல் கேட்டு மனு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

கோவை குண்டுவெடிப்பு: ஆயுள் கைதிக்கு பரோல் கேட்டு மனு!

Apr 24, 2019 18:48 IST

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவுக்கு பரோல் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு உள்துறை செயலாளர் பதில் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998ஆம் ஆண்டு கோவையில் 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக அல் - உம்மா தலைவர் பாட்ஷா கடந்த 20 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக் கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ள தன் தந்தையைக் கவனித்து சிகிச்சை வழங்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும், தன் தந்தைக்கு பரோல் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த மனுவை இன்று (ஏப்ரல் 24) விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன், நீதிபதி நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்கத் தமிழக உள்துறை செயலாளர், சிறைத் துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.