சென்னை சென்ட்ரல் பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!

  1. home
  2. > Minnambalam
  3. > சென்னை சென்ட்ரல் பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சென்னை சென்ட்ரல் பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு!

Apr 06, 2019 17:05 IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கடந்த மாதம் 6ஆம் தேதியன்று, சென்னை வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக – அதிமுக கூட்டணிக் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட ஒப்புதல் தெரிவித்தது மத்திய உள் துறை அமைச்சகம். இது தொடர்பான தகவல் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று மாற்றம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்த பெயர் மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.