கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஐரா திரைப்படத்தில் நயன்தாரா யமுனா, பவானி என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அன்பு, பாசம், செல்வம் என எல்லாம் கிடைக்கப்பெற்ற ஒரு கதாபாத்திரம்; பிறந்தது முதல் வெறுப்பை மட்டுமே பெற்று இழப்புகளை அனுபவித்த ஒரு கதாபாத்திரம். வெவ்வேறு புள்ளியில் உள்ள இந்த இரு கதாபாத்திரங்கள் தான் திரைக்கதையின் மையம். ஆனால் இதை இணைத்த விதம், கதை ஆகியவை செயற்கையாக அமைந்துள்ளது கலையரசன், இளவயது பவானியாக வரும் கேப்ரில்லா, பாட்டியாக நடித்துள்ள குலப்புள்ளி லீலா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டு மாறுபட்ட தோற்றங்களிலும் கச்சிதமாக நயன்தாரா பொருந்தியுள்ளார். ஒளிப்பதிவு, இசை படத்திற்கு பக்கபலம். தன் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கும் வழக்கமான பேய் கதையாகவே ஐரா உருவாகியுள்ளது. தமிழ் சினிமா ஹாரர் படங்களுக்கு கடைபிடித்த அத்தனை கிளிஷே காட்சிகளும் சென்டிமெண்டுகளும் கொட்டிக்கிடக்கின்றன.