சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

Mar 30, 2019 18:15 IST

சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் பிரபலமாகத் திகழும் சரவண பவன் உணவகக் குழுமத்தின் உரிமையாளராக இருந்துவருபவர் ராஜகோபால். இவர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னையடி கிராமத்தில் பிறந்தவர். 1981ஆம் ஆண்டு சரவண பவன் உணவகத்தின் முதல் கிளையை சென்னை கே.கே.நகரில் தொடங்கினார். அதன் பின்னர் பல்வேறு இடங்களில் கிளை பரப்பி, பெரிய குழுமமாக விரிவடைந்தது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவஜோதி என்பவர், தனது தாய் மற்றும் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். ஜீவஜோதியின் தந்தை ராமசாமி, சரவணபவன் உணவகத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இதன் மூலமாக, ஜீவஜோதியின் குடும்பத்திற்கும் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜீவஜோதி, சாந்தகுமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்ய விரும்பிய ராஜகோபால், ஜீவஜோதியை விட்டு விலகிச் செல்லுமாறு சாந்தகுமாருக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தார். சாந்தகுமார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.