டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்படும் அமமுக கட்சிக்கு வரும் மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதற்காக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த சின்ன ஒதுக்கீடு பற்றிய தகவலை டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கிறார். மார்ச் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்த சின்னம் தொடர்பான வழக்கில் தினகரனின் அமமுக பதிவு செய்யப்படாததால், குக்கர் சின்னமோ பொதுச் சின்னமோ வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதற்காக 300 பக்க பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தது. தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர், “அதிமுக மீதான உரிமையை இழக்காமல் இருப்பதற்காகத்தான் அமமுகவைப் பதிவு செய்யவில்லை. எங்கள் சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். தேர்தல் களம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்று வாதிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, “அமமுகவுக்கு குக்கர் ஒதுக்க முடியாது. ஆனால் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் வழங்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்துக்கு