மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் கடந்த மூன்று வாரங்களில் 613.17 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், வெள்ளி, தங்க, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பை மாநிலங்கள் வாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் மார்ச் 27 வரை தேர்தல் பறக்கும் படையால் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.48 கோடி ரொக்கம் உட்பட வெள்ளி தங்க நகைகள் என ரூ.121.63 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பறக்கும் படையால் 613.76 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (ரூ.112.66 கோடி), ஆந்திர பிரதேசம் (ரூ. 110.43 கோ