DMK Walk out of Budget 2021 | Duraimurugan about Budget | O Paneerselvam | Tamil news | nba 24x7 | Editorji
  1. home
  2. > nba தமிழ்
  3. > தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடி திமுக வெளிநடப்பு
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடி திமுக வெளிநடப்பு

Feb 23, 2021 13:09 IST

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.  
Related Tags :