Corona Virus In TamilNadu! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > Corona Virus In TamilNadu!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

Corona Virus In TamilNadu!

Jan 31, 2020 17:54 IST

தமிழகத்திலும் கொரோனா! 

 

சீனாவில் இருந்து தமிழகம் வந்த திருவண்ணாமலையை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி, அதன்பிறகு மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் காயச்சல் கொரோனா. சீனாவில் உருவாகியுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். 8,100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய கேரள பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று (ஜனவரி 30) உறுதி செய்யப்பட்டது. சீனாவில் தங்கியிருந்த திரிபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கேயே உயிரிழந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . அங்கு தங்கியுள்ள 600க்கும் அதிகமான இந்தியர்களை அழைத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 400 பேர் இன்று அழைத்து வரப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருவண்ணாமலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை வஉசி நகரைச் சேர்ந்த மென்பொறியாளர் விமல் (28) சீனாவில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். ஜனவரி 19ஆம் தேதி இவர் தமிழகம் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி அறையில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகளை சேகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்துவருகின்றனர்.

 

இதனிடையே கொரோனா எதிரொலியாக சீனாவின் தியாஞ்சீன் நகரில் இருந்து தனி விமானத்தில் நேற்றிரவு மருத்துவ மாணவி வேலம் என்பவர் சிங்கப்பூர் வழியாக சென்னை வந்துள்ளார். இதுகுறித்து அம்மாணவியின் தந்தை முத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், "கொரோனா வைரஸ் பரவி வருவதால் எனது மகள் சீனாவில் இருந்து இந்தியா திரும்ப முடிவெடுத்தார். பல விமானங்கள் சேவையை ரத்து செய்துவிட்ட நிலையில் சிங்கப்பூர் வழியாக வரும் ஒரேயொரு விமானம் மட்டும் இருந்தது.

அதிலும் வேறு யாரும் இல்லாததால் என்னுடைய மகள் மட்டும் தனியாக பயணம் செய்தார். அந்த காட்சியை செல்பி எடுத்து அனுப்பியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்