Latest news

Independence Day 2022: Sourav Ganguly to lead India against World XI

Independence Day 2022: Sourav Ganguly to lead India against World XI

SC extends demolition date for Super Tech's Noida twin towers till August 28

SC extends demolition date for Super Tech's Noida twin towers till August 28

‘Laal Singh Chaddha’ box office collection day 1:Aamir Khan-Kareena Kapoor starrer has a 'dull start'

‘Laal Singh Chaddha’ box office collection day 1:Aamir Khan-Kareena Kapoor starrer has a 'dull start'

Nitish Kumar: no ambition to be India's Prime Minister

Nitish Kumar: no ambition to be India's Prime Minister

Raju Srivastava is still on ventilator after heart attack; here's what reports have to say

Raju Srivastava is still on ventilator after heart attack; here's what reports have to say

Anbazhagan Condition: M.K.Stalin Cancels His Birthday Celebrations?

திமுகவின் பொதுச் செயலாளரும், இனமானப் பேராசிரியர் என்று கலைஞரால் அழைக்கப்பட்டவரும், பெரியப்பா என திமுக தலைவர் ஸ்டாலினால் பாசத்தோடு அழைக்கப்படுபவருமான க.அன்பழகன், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

98 வயதான பேராசிரியர் அன்பழகனுக்கு வயது மூப்பு காரணமாக நெஞ்சு சளி ஏற்பட்டு 24 ஆம் தேதி இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக இரவு 8. 30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐசியு பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து அன்று இரவே திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். மீண்டும் 25, 26 தேதிகளிலும் அப்பல்லோவுக்கு சென்று பேராசிரியரின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.


25 ஆம் தேதி திமுகவின் முன்னணித் தலைவர்களான பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பேராசிரியரின் உடல் நலம் பற்றி விசாரித்தனர். அதன் பின் டி.ஆர்.பாலு சென்றார். 25 ஆம் தேதி இரவு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனைக்கு விரைந்தார். நேற்றும் பலர் பேராசிரியரின் உடல் நலம் பற்றி அறிய அப்பல்லோ சென்று வந்த வண்ணமாக இருக்கின்றனர். ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் வெளியே இருந்து குறுகிய கண்ணாடி வழியாக மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.


“பேராசிரியருக்கு சில மாதங்களாகவே திரவ ஆகாரமே வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்தே நினைவு திரும்பாமல் இருப்பதால் மூன்று நாட்களாக டிரிப்ஸ் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சத்து இல்லாததால், ரத்த ஓட்டக் குறைவால் பக்கவாதம் ஏற்பட்டு அவரது இடது பக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டர் உதவியோடு பேராசிரியர் படுக்கையில் இருக்கிறார்” என்கிறார்கள் பேராசிரியரை பார்த்து வந்தவர்கள்.


இந்த நிலையில் வரும் மார்ச் 1 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினுடைய பிறந்தநாள் வருகிறது. ஸ்டாலின் பிறந்தநாளை வழக்கமாகவே திமுகவினர் இளைஞர் எழுச்சி நாளாக பெரும் உற்சாகத்தோடு கொண்டாடுவார்கள். நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். வரும் மார்ச் 1 க்கு அதையும் தாண்டி இன்னொரு விசேஷம் இருக்கிறது.

2018 ஆகஸ்டு 7 ஆம் தேதி கலைஞர் காலமான நிலையில், ஆகஸ்டு 28 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். அதற்கு அடுத்து 2019 மார்ச் 1 ஆம் தேதி வந்த அவரது பிறந்தநாளை கலைஞர் காலமாகி ஒரு வருடம் நிறைவு அடையாத காரணத்தால் ஸ்டாலின் கொண்டாடவில்லை.

தலைவர் ஆன பிறகு இதோ 2020 மார்ச் 1 ஆம் தேதிதான் அவரது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினர் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். மாவட்டங்களில் கிளைக் கழக தேர்தல் பணிகள் நடந்தபோதும் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பேராசிரியரின் உடல் நிலை இவ்வாறு இருக்கும்போது பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா என்ற எண்ண ஓட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாகச் சொல்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள். நலத்திட்ட உதவிகள் வழங்குவதை நிறுத்தாமல் அதேநேரம் பிறந்தநாளன்று தொண்டர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சியை நடத்தலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார் ஸ்டாலின்.

Up Next

Anbazhagan Condition: M.K.Stalin Cancels His Birthday Celebrations?

Anbazhagan Condition: M.K.Stalin Cancels His Birthday Celebrations?

IPAC List To DMK - Digital Thinnai

IPAC List To DMK - Digital Thinnai

Effects of Lockdown - J.Jeyaranjan

Effects of Lockdown - J.Jeyaranjan

Cyber attack Using Covid-19 name

Cyber attack Using Covid-19 name

Closed Schools Can Create Nutrition deficiency In Kids

Closed Schools Can Create Nutrition deficiency In Kids

BJP's VIP met TTV.Dhinakaran

BJP's VIP met TTV.Dhinakaran

More videos

Possibility of digital education in India J.jeyaranjan

Possibility of digital education in India J.jeyaranjan

DMK, and PMK are opposing the online classes idea

DMK, and PMK are opposing the online classes idea

AVM Rajeshwari - Cinema Theatre For Middle Class Closed

AVM Rajeshwari - Cinema Theatre For Middle Class Closed

Sundar Pichai's success formula for Students! | Google

Sundar Pichai's success formula for Students! | Google

10th public exam cancelled - Edappadi palaniswami

10th public exam cancelled - Edappadi palaniswami

Did People gather to buy thirupathi ladoo in Chennai?

Did People gather to buy thirupathi ladoo in Chennai?

Edappadi Palanisamy tries Stalin's Formula!

Edappadi Palanisamy tries Stalin's Formula!

TN Election 2021: Emergency Advisory from Chief Election Commissioner!

TN Election 2021: Emergency Advisory from Chief Election Commissioner!

50,000 Debt: Is the Minister's Announcement True? | Sellur Raju

50,000 Debt: Is the Minister's Announcement True? | Sellur Raju

Corona will reach its Peak in October in Tamil Nadu

Corona will reach its Peak in October in Tamil Nadu

Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.