Big B's emotional tweet on his ‘Happy Rebirth Day’

  1. home
  2. > showbiz
  3. > Big B's emotional tweet on his ‘Happy Rebirth Day’
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

ஷங்கர் 25: இயக்குநர்கள் சங்கமம்!

Apr 22, 2019 20:04 IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி 25 ஆண்டுகளாகியுள்ள நிலையில் சக இயக்குநர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர். 1993ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் முதல் படத்திலிருந்தே தனக்கான பாதையை வலுவாக அமைத்துள்ளார். பெரிய பட்ஜெட்டில், முன்னணிக் கலைஞர்களை தொழில்நுட்பக் குழுவுக்குள் கொண்டுவருவது, காலமாற்றத்திற்கு ஏற்ப புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுவாரஸ்யமான திரைக்கதையை ஜனரஞ்சகமான திரைப்படமாக மாற்றுவது ஷங்கரின் பார்முலாவாக உள்ளது. இவரது உதவி இயக்குநர்கள் பலரும் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வருகின்றனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று பிரத்யேகப் பாதையை உருவாக்கிக் கொண்டு நடைபோடுவது ஷங்கருக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். அண்மையில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரது 25ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்காக விழா எடுத்தனர். தற்போது சக இயக்குநர்கள் பலரும் ஒன்று கூடி அவரை வாழ்த்தியுள்ளனர். இயக்குநர் மிஷ்கின் இந்த நிகழ்வை நேற்று அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்திருந்தார். மணிரத்னம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், பா. ரஞ்சித், பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஷங்கர் தவிர அனைவரும் நீல நிறத்தில் ’S25' என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். வெவ்வேறு பாணியில் படங்கள் இயக்குகிற, வெவ்வேறு கருத்தியல் கொண்ட இயக்குநர்கள் ஒன்றாக சந்தித்து தங்களில் ஒருவரை கௌரவிப்பது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Showbiz

Happy birthday R Madhavan!

Jun 01, 2020 13:00 IST