மத்திய சென்னையில் 75 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்!

  1. home
  2. > Minnambalam
  3. > மத்திய சென்னையில் 75 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்!
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

மத்திய சென்னையில் 75 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்!

Apr 20, 2019 15:32 IST

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 40,000 இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 75,000 வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த முறையை விட தற்போது வாக்குப்பதிவு குறைவு என்பது தெரியவந்துள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உட்பட40 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், மத்திய சென்னையில் 75,000 வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, மத்திய சென்னை தொகுதியின் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளரான தெஹ்லான் பாகவி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ”மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அமமுக கூட்டணியில் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் நான் போட்டியிட்டேன். வேட்பாளர் என்ற முறையில் ஒவ்வொரு பூத்துக்கும் சென்று பார்வையிட்டேன். அப்பொழுது, கடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள், இத்தேர்தலில் தங்களின் பெயர் விடுபட்டதாகக் கூறி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்” என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து தெரிவித்தபோது, கடந்த மாதம் வரை அவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தநிலையில், இந்தத் தேர்தலில் எந்தவித முன் அறிவிப்புமின்றி அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தெஹ்லான் பாகவி, “எனக்குக் கிடைத்த தகவலின்படி, மத்திய சென்னை தொகுதி முழுவதும் சுமார் 40,000 இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 75,000 வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளது. பொதுவாகவே, தேர்தலின்போது, இறுதி செய்யப்பட்ட வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கக் கூடிய தேர்தல் அதிகாரி, எவ்வாறு பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் முறையிட்ட பிறகு அனுமதிப்பதும், முறையிடாமல் இருக்கும் பட்சத்தில் அனுமதி மறுப்பதும் என்ற கேள்விக்குத் தேர்தல் ஆணையம் பதில் கூற கடமைப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் விடுபட்டுள்ள 75,000 வாக்காளர்கள் பெயர்களைப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், “இத்தனை வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை விசாரிக்கக் கோரியும், அதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.