1st Ashes Test: Jofra Archer set for Test debut | Editorji
  1. home
  2. > sports
  3. > 1st Ashes Test: Jofra Archer set for Test debut
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

சினி டிஜிட்டல் திண்ணை: பாழடைந்து கிடக்கும் பிக் பாஸ் வீடு!

May 13, 2019 18:22 IST

ஃபேஸ்புக்கின் வரவுக்காக காத்திருந்த காலம் அதிகமானதும், தன்னிடமிருந்த மேட்டரை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸப். “பிக் பாஸ் சீசன் 3 தொடங்குறதுக்காக காத்துக்கிட்டு இருக்குறது தமிழகம் மட்டுமில்லை, பிக் பாஸ் டீமும் தான். கமல்ஹாசன் சொன்னாருன்னா உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம் என்ற இன்ஃபர்மேஷன் எல்லா பக்கமும் போய்கிட்டு இருக்கு. அதனுடைய ஒரு சின்ன லீக் தான் மகேந்திரன், சாக்ஷி, லைலா, ரமேஷ் திலக் இப்படியாக நீண்டுகிட்டே போகுது. இதுல லைலாவும், ரமேஷ் திலக்கும் ‘என்னது பிக் பாஸ்ல நாங்களா?’ என்று அதிர்ச்சியடைந்து, ‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை’ என்று ஆத்திரப்பட்டதால, அவங்க இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. பிக் பாஸ் நிகழ்ச்சியோட சாராம்சமே, எதிர்பாராத நிகழ்வுகளை அப்பப்ப அரங்கேற்றம் செய்றதும், அதை ரசிகர்கள் உயிரோட வெச்சிருக்குறதும் தான். அதனால, இந்தமுறை எல்லா போட்டியாளர்களையும் ரகசியமா வைக்குறதுல ரொம்ப கவனமா இருக்காங்க. ரமேஷ் திலக், லைலா போன்றவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கலன்னு சொல்லியிருக்காங்களே தவிர, பிக் பாஸ் சார்புல அவங்கள அப்ரோச் பண்ணலன்னு சொல்லவும் இல்லை. இவங்க லிஸ்ட்ல இருந்தது உண்மைன்னாலும் ஏதோ சில காரணங்களால், நிகழ்ச்சியில் இடம்பெறவில்லைன்றது தான் உண்மை. பிக் பாஸ் டீம் இந்தமுறை ரொம்பவுமே கிரிட்டிக்கலான ஆட்களை உள்ள கொண்டுவர பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆரவ் மாதிரியான இமேஜை உருவாக்கக்கூடிய ஒரு சாக்லேட் பாய், சினிமாவில் மார்க்கெட் இல்லாத ஒரு நடிகை. யூடியூப் நிகழ்ச்சிகள் மூலமா பாப்புலர் ஆன ஒரு நபர், டிக் டாக் மூலமா பிரபலமான ஒரு பெண் மாதிரி இந்த ஷோ-வை ரொம்ப ஆர்வத்தோட முன்னெடுத்துக்கிட்டு போற பல கேரக்டர்களை உள்ள கொண்டுவர்றது தான் டார்கெட்டா கொடுத்திருக்காங்க. அதற்காக பல பெயர்களையும் பிக் பாஸ் டீம் ரெகமெண்ட் பண்ணதுல, டீமுக்குள்ளவே வோட்டிங் நடத்தி செலெக்ட் பண்ணியிருக்காங்க. இந்த வோட்டிங் செலெக்ஷன் ரிசல்ட் ரொம்ப திருப்தியா இருந்ததால தான், பல வாரங்கள் தயங்கிக்கிட்டே இருந்து, ஒரு வழியா கமல் கிட்ட பேசி முடிச்சிருக்காங்க. பிக் பாஸ் டீம் செலெக்ஷனை பாராட்டிய கமல், ஒரு நிபந்தனையை சொல்லியிருக்கார். அது, லோக் சபா மற்றும் இடைத்தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகு பிக் பாஸ் வேலைகளைத் தொடங்குறது. கமல் எதிர்பார்த்த எலெக்ஷன் ரிசல்ட் கிடைக்கலன்னாலும், வரப்போற ரிசல்டை மனதாற ஏத்துக்கிட்டு இதையே மக்களுடைய முதல் அங்கீகாரமா மாத்தனும்ன்றது கமலுடைய பிளான். அதற்காகவே, எலெக்ஷன் ரிசல்ட் வர்ற வரைக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, மற்றும் தேவர் மகன் 2, இந்தியன் 2 ஆகிய படங்களை தொடங்க வேண்டாம்னு சொல்லி வைத்திருக்கிறார்” என்று வாட்ஸப் டைப் செய்து முடித்தபோது, ஃபேஸ்புக்கும் ஆன்லைன் வந்தது. மேட்டரை ஃபேஸ்புக்கின் இன்பாக்ஸுக்கு வாட்ஸப் அனுப்பியதும், அதனை ஷேர் செய்த ஃபேஸ்புக், தொடர்ந்து போஸ்ட் ஒன்றைப் போட்டது. “கமல் சொன்ன விஷயங்களோட தாக்கம், இங்க மட்டுமில்லை பாம்பே வரைக்கும் பாதிச்சிருக்கு. பிக் பாஸ் டீம் ரெடி செய்து வைத்திருந்த யூனிட் ஆட்கள் அங்க இருந்தே சில சலசலப்புகளை உருவாக்குறதா தெரியுது. தமிழ் சினிமாவில் வேலை செய்யும் யாரையும், பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு வேலைக்கு எடுக்குறது கிடையாது. முழுக்க மும்பைல இருந்து தான் இறக்குமதி செய்றாங்க. தமிழ்நாட்டு ஆட்களை வேலைக்கு வைத்தால், பிக் பாஸ் வீட்டில் நடப்பதை வெளியில் சொல்லிவிடும் வாய்ப்பு இருப்பதால் ஆட்கள் அத்தனைப்பேரும் மும்பைல இருந்தே வர்றாங்க. ஆனால், அதற்காக இந்த முறை அக்ரிமெண்ட் போட்டவங்க ரெடியா இருந்தும், சென்னைக்கு வரவேண்டாம்னு சொல்லப்பட்டிருக்கு. கமல் ஓகே சொன்னதுக்கு பிறகு தான் இங்கே வரணும் என்று சொல்லிவிட்டதால், எத்தனை நாட்கள் வேலை செய்யாமல் சும்மா இருப்பது? என்று ஒரு பிரச்சினை கிளம்பியிருப்பதாக, மும்பையிலிருந்து வந்த டிவிட்டர் குருவி ஒன்று கூறிவிட்டுச் சென்றது. பிக் பாஸ் வீடு இப்போது வரையிலும் பாழடைந்தே கிடப்பதால் பிக் பாஸ் அலை, ரிசல்ட் அலை அடிக்கும் வரை வரப்போவதில்லை” என்ற ஃபேஸ்புக் போஸ்டை ஷேர் செய்துவிட்டு சொல்லிக்கொள்ளாமல் சைன் அவுட் ஆனது வாட்ஸப்.

Sports