மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்திற்கான படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இனைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கெனவே நயன்தாரா ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது இவர்கள் இணைந்து நடிக்கும் நான்காவது படம் ஆகும். இந்நிலையில் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மும்பையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டதுடன் அதையே கதைக்களமாக