மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக 1558 பேரும், இடைத் தேர்தலுக்காக 508 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று நேற்று 3 மணியோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கடந்த ஒரு வாரமாகக் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று அமமுக வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். தாமதமாக வந்ததால் பெரம்பலூர் தொகுதி மநீம வேட்பாளர் செந்தில்குமார் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எத்தனை பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. மக்களவைத் தேர்தல் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 1558 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 1385 பேர், பெண்கள் 171 பேர் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் (மதுரை, தென் சென்னை) ஆவர். அதிகபட்சமாகச் சென்னை தெ