ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.12.20 லட்சம் நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், லாரி ஒட்டுநரான தனது கணவர் கண்ணன், நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து பின்னர், சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வந்ததாகவும், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி வயல்வெளியில் தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் கணவர் இறந்துவிட்டதால் மூன்று பெண் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படுவதையும், பஞ்சவர்ணத்தின் கணவர் கண்ணன், மின்சாரம் தாக்கி உயிரிழக்கவில்லை என பிரேத பரிசோதனையில் கூறி இழப்பீடு தர அதிகாரிகள் மறுக்கின்றனர் என்றும் குறிப்பிட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்த தனது கணவருக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை மார்ச் 26ஆம் தேதி விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓ