1.24 கோடி நகைகள் பறிமுதல்! | Editorji
  1. home
  2. > Minnambalam
  3. > 1.24 கோடி நகைகள் பறிமுதல்!
prev iconnext button of playermute button of playermaximize icon
mute icontap to unmute
video play icon
00:00/00:00
prev iconplay paus iconnext iconmute iconmaximize icon
close_white icon

1.24 கோடி நகைகள் பறிமுதல்!

Mar 29, 2019 14:47 IST

சேலத்தில் ரூ. 1.24 கோடி தங்க நகைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம், ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கே வந்த வேன் ஒன்றை ஆய்வு செய்ததில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் நகைக்கடைக்கு எடுத்துச் செல்வதற்காகத் நகைகள் கொண்டு வரப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அபுல் காசிம் கூறியுள்ளார். அதேபோல கும்பகோணம் கொத்துகோவில் பகுதியில் ரூ.3 லட்சமும், ஈரோடு சத்தியமங்கலம் அருகே ரூ.2.68 லட்சமும், நாமக்கல் பரமத்தி வேலூர் அருகே கீரம்பூரில் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கமும் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.