சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், சகோதரர் என்ற முறையில் ரஜினியை சந்தித்தேன். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ரஜினிக்குத்தான் தெரியும். ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை. உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தித்து முடிவெடுங்கள் என ரஜினியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்