இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமானார்.ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது, பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 150 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இன்றைய டி20 அறிமுக போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார் தமிழக வீரர் நடராஜன். மேக்ஸ்வெல்லை 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆக்கி வெளியேற்றினார். மேலும் ஆர்கி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்கையும் வெளியேற்றினார்.