கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .
சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது குடும்பத்தில் பரிசோதனை செய்ததில் யாருக்கும்
கரோனா இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணி கேப்டனாக சச்சின் பங்கேற்றார்.
அவருடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விரேந்திர ஷேவாக் யுவராஜ்சிங் இர்பான் பதான் யூசுப் பதான் போன்றோரும் இணைந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.