வேலூரில் இரவில் தீ விபத்து!
Updated : Apr 30, 2019 13:41
|
Editorji News Desk
வேலூர் மாவட்டம், அண்ணாசாலையில் உள்ள தனியார் ஷு, காலணி, விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.. வேலூர் மாவட்டம், அண்ணாசாலையில், வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர், சௌகத் அலி. இவர் ‘தாஜ் பேரடைஸ்’ என்னும் பெயரில் ஷீ, காலணிகள், கை பைகள்( School bag, travel bag) விற்கும் கடை வைத்துள்ளார், இதன் உரிமையாளர் விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் கடையின் உட் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிந்து கடை முழுவதும் பரவியுள்ளது, கட்டிடம் முழுவதும் தீ பற்ற துவங்கியதையடுத்து, தகவலறிந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் 30-க்கும் மேற்பட்டோர், 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயை அணைக்க, தீயணைப்பு படையினர் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்து போனது. இதனால் காவல் துறையினரின் வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த தீவிபத்தில் கடையில் உள்ள பொருட்களோடு, கடை மொத்தம் எரிந்து நாசமானதால் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடை முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளதால், கடைகளில் உள்ள ஏசியில், மின் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இத்தீவிபத்து குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended For You