பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது!
Updated : Apr 27, 2019 22:37
|
Editorji News Desk
தேனி மாவட்டத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இராணுவ வீரரை போலிசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவர் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இராணுவ வீரர் பாண்டீஸ்வரனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் அவர் ஏற்கெனவே 2017ஆம் ஆண்டு மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒரு மற்றொரு சிறுமியை இவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அச்சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்துகொள்வதாக அப்போது எழுதிக்கொடுத்துள்ளார்.
Recommended For You