அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது- மு.க.ஸ்டாலின்

Updated : Mar 22, 2021 11:41
|
Editorji News Desk

அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.திமுக வேட்பாளர்களை ஆதரித்து அம்பத்தூரில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது மு.க.ஸ்டாலின் பேசியது: சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை. இப்போது செயின்ட் ஜாா்ஜ் கோட்டையை நாம் கைப்பற்ற வேண்டும். தமிழகம் இப்போது எல்லா துறையிலும் பாழ்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் உள்ளோம்

ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்வதாகவும் பல விருதுகள் கிடைப்பதாகவும் அவரே கூறிக்கொள்கிறாா். விவசாயி, விவசாயி என்று முதல்வா் கூறியுள்ளாா். மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகம் விவசாயத்தில் 19-ஆவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் எல்லாம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியின் தொழிலதிபா்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான், இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் புயல் தடுப்பு மேலாண்மை அமைக்கப்படும். ஆட்டோ மானியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். சென்னையில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் என்றெல்லாம் அறிவித்துள்ளோம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருக்கும் ரூ.5 ஆயிரம் கொடுக்க கூறினோம். அரசு மறுத்துவிட்டது. பிறகு ரூ.1, 000 மட்டும் கொடுத்தனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் மீதமுள்ள ரூ.4 ஆயிரம் தருவோம் என்று அறிவித்துள்ளோம். நிச்சயம் தருவோம். மே 2-இல் ஆட்சிக்கு வருவோம். ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளன்று தருவோம். திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா்.

Recommended For You

editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்