குடிமராத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை, ஊழல் தான் செய்து வருகின்றனர். நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என தெரிவித்த ஸ்டாலின், தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என்று ரஜினி யோசிப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.