பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை, தாய் இருவரையும் நேரில் சென்று மீட்டு, பாதுகாப்பு மையத்தில் கொண்டு சேர்த்த கடலூர் எஸ்.பி. ம. ஸ்ரீ அபிநவ்.
கடலூர் மாவட்டம் கொளக்குடி கிராமம் சுமார் 60 குடும்பங்கள் மழை நீரினால் சூழ்ந்துள்ளதாக தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், அதிரடிப்படை மீட்புக்குழுவினர் மற்றும் காவல்துறை படகு மீட்பு குழுவினருடன் விரைந்து சென்று வெளிவர முடியாமல் இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையத்தில் கொண்டு சேர்த்தனர். அந்த சமயத்தில் கொளக்குடி கிராமத்தில் பிறந்து ஆறு நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி இருப்பதை அறிந்த ஶ்ரீஅபிநவ் நேரில் சென்று ஆறுதல் கூறி, பத்திரமாக படகில் ஏற்றி காவல்துறை வாகனம் மூலம் பாதுகாப்பு மையத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது.இதை தொடர்ந்து வலைத்தளங்களில் எஸ்.பி. ஸ்ரீ அபிநவ்க்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்