சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Updated : Dec 16, 2020 14:49
|
Editorji News Desk

அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை தொடங்கியது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு விடுதியில் 100 மாணவர்கள் வீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வைத்து மாணவர்களின் முகவரி உள்பட சுயவிவரங்கள் பெற்று அவர்களின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

‘சென்னை ஐஐடியில் மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணாபல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. ஐஐடியில் நேற்றுவரை 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் தொற்று எண்ணிக்கை 191ஆக கூடியுள்ளது.

Anna University

Recommended For You

editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்